Wednesday, July 25, 2012

தமிழில் ஆண்களைக் குறிப்பிட, வெவ்வேறு வயதில் வெவ்வேறு பெயர்கள் உள்ளன.

௧) பாலன்

௨) மீளி
...
௩) மறவோன்

௪) திறலோன்

௫) காளை

௬) விடலை

௭) முதுமகன்

பெண்களின் ஏழு பருவங்கள் ;-

•பேதை 1 முதல் 8 வயது வரை

•பெதும்பை 9 முதல் 10 வயது வரை
...
•மங்கை 11 முதல் 14 வயது வரை

•மடந்தை 15 முதல் 18 வயது வரை

•அரிவை 19 முதல் 24 வயது வரை

•தெரிவை 25 முதல் 29 வயது வரை

•பேரிளம் பெண் 30 வயது முதல்

Sunday, July 15, 2012

நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!!



உடலில் காணப்படும் நகங்களை அழகுப்படுத்த மட்டும் தான் இருக்கின்றன என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இது மிகவும் முக்கியமான உறுப்பு. சிலர் நகங்களில் அதிகமாக அடிக்கடி அழுக்குகள் நுழைந்து நகங்களின் அழகைக் கெடுக்கிறது என்று வண்ணம் தீட்டுகின்றனர். மேலும் சிலரின் நகங்கள் நன்றாக பொலிவோடு இருக்கும், திடீரென்று நகங்களின் பழைய அழகு மாறி, நிறம் மாறி காணப்படும். இவ்வாறு ஏற்பட்டால் உடலில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஏனெனில் நாம் இந்த நகங்களை வைத்து உடலில் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ள முடியும்.
நகத்தின் அமைப்பு, நிறம் வைத்து மருத்துவர்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை எளிதில் கண்டறிவார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலம் நகத்தில் தெரிந்துவிடும். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இப்போது என்னென்ன நிறத்தில் இருந்தால் என்னென்ன பிரச்சனை என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நோய் அறிகுறிகளை கண்டறிய...

நகங்கள் வெள்ளை நிறத்தில் இருந்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி சிவப்பாக இருந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது. நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உடலில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் நகங்களானது இருக்கும்.

நகங்கள் வெளுத்து குழியாக இருந்தால், இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருக்கும். மேலும் நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருந்தால், நாள்பட்ட நுரையீரல், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும். நகங்கள் நீல நிறத்தில் இருந்தால் இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் ஒன்றாக கலந்திருக்கிறது.

மேலும் இரத்தத்தில் போதிய அளவுக்கு ஓட்சிசன் இல்லாவிட்டாலும், ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும். அவர்கள் அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாகச்சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும். ஆகவே அவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

சின்ன சின்னக் குழிகள் நகத்தில் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால், அது சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும். நகத்தில் மஞ்சள் கோடுகள் இருந்தால், அதிகமாக புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து இருக்கலாம் அல்லது நகங்களுக்கு நெயில் பாலிஷ் தீட்டுவதாலும் ஏற்பட்டு இருக்கலாம்.
நகங்களில் எப்போதும் செய்யக்கூடியவை... செய்யக்கூடாதவை...

1. நகங்களை எப்போதும் நுனிப்பகுதிகளை சுத்தமாக வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டினால், நகத்தை சுற்றி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும்.

2. நகங்களை பற்களால் கடிக்கக்கூடாது. நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே நகங்களை வெட்ட வேண்டும்.

3. சாப்பிட்டப்பிறகு கைகளை கழுவும் போது நகங்களை சுத்தமாக கழுவ வேண்டும். இல்லையென்றால் நகங்களில் கிருமிகள் படிந்து வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.

4. இரவில் தூங்கும் முன் கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை சுத்தமாக கழுவி பின் தூங்க வேண்டும்.
5. நகங்கள் அழகாக இருக்க தினமும் காய் மற்றும் கனிகளை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் காய்கனிகளில் உள்ள
சத்துக்கள் உடலில் எந்த நோயும் அண்டாமல் பாதுகாக்கும்.

ஆகவே நகங்களானது எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவு நமது உடலும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Monday, July 9, 2012

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் எப்படி ?

 உடல் பருமன் : நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவ...ாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்டிரால்ல நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு கொலஸ்ட்ரால்: கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது

இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. உடலானது தேவையான அளவு கொலஸ்டிராலினை உற்பத்தி செய்கிறது. எனவே வேறு கொலஸ்டிரால் உடைய உணவை உண்ணாமல் இருந்தால் நல்லது. ஆனால் உணவில், கொலஸ்டிராலை முழுமையாக தவிர்ப்பதென்பது கடினமானமாகும். ஏனெனில் பல உணவுகள் இதனை தன்னுள் கொண்டுள்ளன. உடலில் அதிகளவு கொலஸ்டிரால் என்பது இதய நோய்கள் போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பல காரணிகள் உயர் அளவு கொலஸ்டிரால் ஏற்பட பங்களிக்கிறது, ஆனால் சில செயல்கள் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.

* கொலஸ்டிரால் அளவு உங்கள் உடலில் உள்ள எச்டிஎல் கொலஸ்டிரால் அளவு (நல்ல கொலஸ்டிரால்) மற்றும் எல்டிஎல் கொலஸ்டிரால் அளவு (கெட்ட கொலஸ்டிரால்) களை பொறுத்துள்ளது. எல்டிஎல் கொலஸ்டிராலைவிட எச்டிஎல் கொலஸ்டிரால் உடலில் அதிகளவு இருப்பது உடலில் உள்ள சுகாதாரமான கொலஸ்டிரால் அளவை பேண மிக முக்கியமாகும்.

* உடலில் நல்ல கொலஸ்டிராலலின் அளவை அதிகரிக்க, உங்கள் உணவில் எந்த வகையான கொழுப்புகள் உள்ளன என்பதனை கவணியுங்கள், குறிப்பாக ட்ரான்ஸ் பாட் (அன்சாச்சுரேட்டெட் பாட்) டினை தவிர்ப்பது நல்ல வழியாகும்.

* இதய இரத்தநாள பயிர்ச்சிகளை ஒழுங்காக செய்வது, உணவில் குறைந்த அளவு கொலஸ்டிராலினை எடுத்துக்கொள்வது மற்றும் புகைக்காமல் இருப்பது போன்றவை உடலில் கெட்ட கொலஸ்டிரால் சேர்வதை அகற்றும் பிறவழிகளாகும்.

கொலஸ்டிரால் உள்ளவர்கள் எதை சாப்பிடலாம் எதை தவிர்க்கலாம் :

* வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள். மொனொ அன்ஸேச்சுரேடெட் எண்ணெய் மற்றும் பாலி அன்ஸேச்சுரேடெட் எண்ணெய்கள், சமையலில் உபயோகிக்க வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.

* கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெயிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.

* பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.


* ஒலிவ எண்ணெய் (ஜைத்தூன் எண்ணெய்) யில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ்(antioxidants) உள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. FDA பரிந்துரைப் படி தினமும் 2 மேஜைக்கரண்டி (23 Gram) ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு மிக நல்லதாம்.

* தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையை குறைக்கிறது என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இதை தொடக்கூடாது என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது. தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் Capric Acid,மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் போதிய அளவு தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம்.

* எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்டைஸ்டு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

* அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் அதிகம் உள்ளது. * முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம்.ஆனால் முட்டையை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.

* அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.

* கொட்டை வகைகள்:


முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.


* வால் நட்டில் அதிக அளவு பாலி அன் சேச்சுரேட்டட் அமிலக் கொழுப்பு உள்ளது. இது கொலெஸ்ட்ராலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. பாதாமும் இதைப் போல் குணமுடையது


* பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.


* ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும் * எண்ணெயில் பொரித்துண்ணும் உணவுகளை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்ததோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.

* கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk), வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.


* டோனட்ஸ் (Dough nuts), மஃப்பின்ஸ்(muffins) போன்ற pastry பாஸ்ட்ரி வகை துரித உணவு(fast food)களைத் தவிர்க்க வேண்டும்.


* பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.


* வெண்ணையைத் தவிர்த்து, திரவ நிலையிலான மார்கரின் பயன்படுத்தலாம்.


* உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளவது கூடுதலாக உள்ளக் கொழுப்பு உணவைத் தவிர்க்க உதவும்.


* இனிப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். * நார்ச்சத்து காய்கறிகள்: நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.


* ஓட்ஸில்(Oatmeal) கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது .இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கிறது.கிட்னி பீன்ஸ், ஆப்பிள், பியர்ஸ், பார்லி போன்றவற்றிலும் இத்தகை கரைக்கூடிய நார் சத்து அதிகம் உள்ளது.


* வாழைப் பழத்தில் அதிக நார் சத்து உள்ளது நல்லது


-நல்லது நாம் சாப்பிடும் உணவு வகையில் கொலஸ்டிராலின் அளவு :


* முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) -550 (mg /100gm)


* வெண்ணெய் -250 (mg /100gm)


* சிப்பி மீன் (Oyster)-200 (mg /100gm)


* இறால் (Shrimp)-170 (mg /100gm)


* மாட்டு இறைச்சி -75 (mg /100gm)


* ஆட்டிறைச்சி (Mutton)-65 (mg /100gm)


* கோழியிறைச்சி-62 (mg /100gm)


* பனீர் (cottage cheese)-15 (mg /100gm)


* ஐஸ் கிரீம்-45 (mg /100gm)


* நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை)-34 (mg /100gm)


* கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை)-5 (mg /100gm)


* பிரெட்-1 (mg /100gm)


* ஸ்போஞ்ச் கேக்-130 (mg /100gm)


* சாக்லேட் பால்-90 (mg /100gm)


நாமும் இதைப்பின்பற்றினால் கொலஸ்டிரால் இல்லாத மனிதனாக வாழ முயற்சிக்கலாமே....

Wednesday, July 4, 2012

என்றும் இளமையோடு வாழ



 திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ...ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல் ..

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.



இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
... பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.
மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.
இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.
குங்குமப் பூவின் சிறப்பு!–பூக்களின் மருத்துவக் குணங்கள்,

விலை சற்று அதிகமாக இருந்தாலும் மேனி அழகைக் கூட்டுவதில் குங்குமப் பூவுக்கு இணை குங்குமப் பூதான். இதோ சில குங்குமப் பூ அழகு குறிப்புகள்…
குங்குமப் பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டுக் கலந்து குழைத்துக் கொள்ளவும்.

... இந்தக் கலவையை முகத்தில் பூசி வர, முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண்கூடாகக் காணலாம். இந்த முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

குங்குமப் பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் இறங்கியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தொடர்ந்து சில நாட்களுக்கு பூசி வந்தால், உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். இதழ்களின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் மறைந்து விடும்.

மேலும், நகச்சுத்தி வந்து பாதிக்கப்பட்ட நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப் பூ-வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத் தருகிறது.

ஒருவரது முகத்திற்கு வசீகரத்தைத் தருவது கவர்ச்சி மிகுந்த கண்கள்தான். அப்படிப்பட்ட கவர்ச்சியான கண்களுக்கு `பளிச்’ அழகைத் தருவது அடர்த்தியான இமைகள். உங்களின் இமைகள் எழில் பெற இந்தக் குங்குமப் பூ கலவையை அடிக்கடி பூசி வரலாம்.

கர்ப்பிணிகள் இதை பாலுடன் கல‌ந்து குடித்து வந்தால் குங்குமப் பூ போல குழந்தைப் பிறக்கும்

Tuesday, July 3, 2012

பெனிசிலின் என்ற அற்புத மருந்தை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் ப்ளெமிங் !!!

ஆன்டிபயாடிக் மருந்தை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் ப்ளெமிங் !!!

நாம் நோய்வாய்ப்பட்டால் உடனே மருத்துவரைப்பார்த்து ஆன்டிபயாடிக் எனப்படும் கிருமிக்கொல்லி மருந்தை உட்கொண்டு குணமடைகிறோம். ஆனால் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? முதலாம் உலகப்போரில் காயமடைந்த கிட்டதட்ட ஏழு மில்லியன் வீரர்கள் சரியான நோய்க்கொல்லி மருந்து இல்லாததால் மடிந்துபோனார்கள் என்பது வரலாற்று உண்மை. நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் மருத்துவமேதை கொஞ்சம் முன்னதாகவே பிறந்திருந்தால் அந்த எழு மில்லியன் வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்ககூடும். அவர் வேறு யாருமல்ல பெனிசிலின் என்ற அற்புத மருந்தை உலகிற்கு தந்ததன் மூலம் மருத்துவ உலகின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த அலெக்ஸாண்டர் ப்ளெமிங்.

1881 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி ஸ்காட்லந்தில் லாக்ஃபில் எனும் நகரில் ஓர் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார் அலெக்ஸாண்டர் ப்ளெமிங். அவர் விவசாயத்தில் ஈடுபடுவார் என குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் ப்ளெமிங் விவசாயத்திலும் ஈடுபடாமல் படிப்பையும் மேற்கொள்ளாமல் ஓர் நிறுவனத்தில் சுமார் 4 ஆண்டுகள் எழுத்தராக பணி புரிந்தார். தமது 20 ஆவது வயதில் அவருக்கு கொஞ்சம் பணம் சேர்ந்ததால் லண்டனில் செயின் மேரி மருத்துவ பள்ளியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார்.

டைபாய்டு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்த சர் ஆம்ராத் எட்வர்ட் ரைட் என்பவர்தான் ப்ளெமிங்கிற்கு பேராசிரியராக இருந்தார். 1906 ஆம் ஆண்டு மருத்துவத்தில் சிறப்பு தேர்ச்சிபெற்று அந்த பேராரசிரியரிடமே உதவியாளராக சேர்ந்தார் ப்ளெமிங். தனது பேராசிரியரைப்போலவே தானும் மனுகுலத்துக்கு உதவும் ஏதாவது ஒரு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது. பாக்டீரியா கிருமிகளைப்பற்றி ஆராயத்தொடங்கினார். முதல் உலகப்போரில் அவர் இராணுவ மருத்துவ குழுவில் ஒரு கேப்டனாக இருந்தபோது சரியான மருந்து இல்லாமல் மடிந்துபோன போர் வீரர்களின் நிலை அவரை சிந்திக்க வைத்தது.

அந்தக்கால கட்டத்தில் கார்பாலிக் அமிலந்தான் கிருமிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த அமிலம் கிருமிகளை கொல்லும் அதே வேளையில் இரத்தத்தில் உள்ள வெள்ளை அனுக்களையும் சில சமயம் அழித்துவிடுகிறது. முதலாம் உலகப்போரில் சுமார் 7 மில்லியன் வீரர்கள் காயம்பட்டு இறந்தனர். அதன்பிறகுதான் கார்பாலிக் அமிலம் சரியான மருந்து அல்ல என்பதை ப்ளெமிங்கும் அவரது பேராசிரியரும் உலகுக்கு அறிவித்தனர். அதோடு நின்றுவிட்டால் போதுமா? சரியான மருந்தை கண்டுபிடிக்க வேண்டாமா? உலகபோர் முடிந்த கையோடு மீண்டும் தன் ஆராய்ட்சிக்கூடத்திற்கு திரும்பினார் ப்ளெமிங். கிருமிகளை கொல்லும் மருந்து வேண்டுமென்றால் முதலில் கிருமிகளின் தன்மைகளைபற்றி தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?


எனவே தனக்கு கிருமி தொற்றக்கூடும் என்ற அச்சம் கொஞ்சம்கூட இல்லாமல் பலவகை கிருமிகளை வளர்த்து அவற்றின் மீது சோதனை செய்தார் ப்ளெமிங். 1928 ஆம் ஆண்டு லண்டனில் இலையுதிர் காலத்தில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. இரண்டுவாரம் விடுமுறைக்காக சென்றிருந்தார் ப்ளெமிங். விடுமுறைக்கு செல்லும் முன் அவர் ஓரு ஆய்வுக்கூட வட்டில் ஸ்டெபிலோ காக்கஸ் என்ற கிருமியை சேமித்து வைத்துவிட்டு சென்றார். அந்த கிருமிதான் நிம்மோனியா முதல் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் கிருமி. இரண்டு வாரம் விடுமுறை கழித்து வந்து பார்த்தபோது அந்த வட்டில் பூசனம் பூத்திருப்பதை பார்த்தார். பூதக்கண்ணாடி வைத்து பார்த்தபோது அந்த பூசனம் படர்ந்திருந்த இடங்களில் கிருமிகள் கொல்லப்பட்டிருப்பதை அவர் கண்டறிந்தார். உடனே ஒரு முக்கியமான பொருளை கண்டுபிடித்துவிட்ட உணர்வு அவருக்கு ஏற்பட்டது.


அந்த பூசனம் பெனிசிலியம் என்ற ஒருவித காளான் என்பது அவருக்கு புரிந்தது. அந்தக் காளானைக் கொண்டு பல்வேறு ஆராய்ட்சிகள் செய்தார் அதன் விளைவாக நமக்கு கிடைத்த அருமருந்துதான் பெனிசிலின். மனுகுலத்துக்கு உயிர்காக்கும் மாமருந்தை தந்த ப்ளெமிங்கை உலகம் அப்போது பாராட்டவில்லை. இருப்பினும் பெனிசிலின் அருமை உலகம் முழுவதும் பரவியது. இரண்டாம் உலகப்போரின்போது அதிக அளவில் பெனிசிலின் உற்பத்தி செய்யப்பட்டு காயமடைந்த போர் வீரர்களுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன் பயனாக மில்லியன் கணக்கான உயிர்கள் காக்கப்பட்டன. நோய் தொற்று அபாயம் ஏற்படுமே என்று அதுவரை அறுவை சிகிச்சை செய்ய தயங்கிய மருத்துவ உலகம் பெனிசிலின் வரவுக்கு பிறகு தைரியமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டது.

அதுவரை தீர்க்கப்படாத முடியாதவை என்று கருதப்பட்ட நோய்களுக்கு திடீரென்று சிகிச்சை அளிக்க முடியும் என்பதை உலகம் கண்டுகொண்டது. பெனிசிலினுக்குப் பிறகு எத்தனையோ வேறுவித ஆன்டிபயாடிக் மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் அவை அனைத்துக்கும் அஸ்திவாரம் போட்டு தந்தது பெனிசிலின்தான். மனுகுலத்துக்கு பெனிசிலின் என்ற மாமருந்தை தந்த ப்ளெமிங் அதனால் எந்த பொருளியல் லாபமும் அடையவில்லை அந்த மருந்துக்கு காப்புரிமை பெறச்சொல்லி எத்தனையோ நண்பர்கள் வற்புறுத்தியும் அதை அவர் செய்யவில்லை செய்திருந்தால் அவர் கோடீஸ்வரராகியிருப்பார். இருந்தாலும் அந்த உயிர்காக்கும் கண்டுபிடிப்புக்காக 1945 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை தந்து தனது நன்றியை தெரிவித்துக்கொண்டது உலகம்.

ஒரு மனிதனின் விடாமுயற்சியால் கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் எண்ணிலடங்கா உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கின்றன. இன்னும் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்படப் போகின்றன. உயிர் விலை மதிக்க முடியாதது என்றால் அந்த உயிரை காக்கும் எந்த கண்டுபிடிப்பும் அதைவிட விலை மதிக்க முடியாதது அல்லவா? அந்த விலைமதிக்க முடியாத மருந்தை உலகுக்கு தந்த ப்ளெமிங் 1955 ஆம் ஆண்டு மார்ச் 11 ந்தேதி லண்டனில் காலமானார். அடுத்தமுறை நீங்கள் ஆன்டிபயாடிக் மருந்தை உட்கொள்ளும்போது ப்ளெமிங்கிற்கு நன்றி சொல்லுங்கள். அவர் பொருள் சம்பாதிப்பதற்காக அந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தவில்லை.

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் !!!


 மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும்.
... இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது.
வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.
இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.


குழந்தைகளுக்கு சளி, காய்ச்சலா வெற்றிலை சாறு கொடுங்க !

குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் என்றாலே பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு மருத்துவரிடம் ஓடுகின்றனர். ஆனால் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் எதற்கும் பதற்றப்படத் தேவையில்லை சின்ன சின்ன கை வைத்தியங்களை செய்து குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை செய்வார்கள். அப்புறம் மெதுவாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம். சிறு குழந்தைகளின் சளியை போக்குவதில் வெற்றிலை ம...ிக முக்கிய பங்காற்றுகிறது. மூலிகை குணம் நிறைந்த வெற்றிலை குழந்தைகளின் நோயை போக்குவது குறித்து அனுபவம் வாய்ந்த பாட்டி சொல்வதை கேளுங்களேன்.

மூச்சுதிணறல் குணமாகும்

குழந்தைகளுக்கு சளி அதிகமானால் இருமலும் மூச்சுத் திணறலும் ஏற்படும் அவர்களுக்கு வெற்றிலை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. வெற்றிலையை லேசாக மெழுகுவர்த்தி நெருப்பில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

நுரையீரல் நோய்கள்

குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல், ஜன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மசித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் இருந்தால் வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படும். வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

மலச்சிக்கல் நோய் குணமாக

சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

கட்டிகள் குணமாகும்

வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். தலையில் தண்ணீர் கோர்த்து மூக்கில் விடாது ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும். வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். இதை இரவில் செய்தால் நல்லது.சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுகத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

குரல் வளம் கிடைக்கும்

வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும். வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்