Saturday, May 26, 2012

உணவு வகைகளில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் வாசனை பொருட்களாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.





புற்றுநோயை தடுக்கும் குணம் கொண்டது கறிவேப்பிலை
-ஆய்வில் தகவல்....

பொதுவாக கறிவே...ப்பிலை உணவில் வாசனையை தர பயன்படுகிறது என்று தான் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் என்னவோ சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டுவிடுகிறோம். இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். ஏனென்றால் கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன. இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது.

இத்தகைய குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை குறித்து ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர். மேலும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்றும் கூறுகின்றனர். கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் நன்மை உண்டா? என்று திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக் கழகத்தில் மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ. பாதித்து செல்களிலுள்ள புரோட்டின் அழிந்து, அதன் விளைவாக புற்றுநோய், வாதநோய்கள் வருகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

இது தவிர நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவு பாதியாக குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இனி கறிவேப்பிலையை உணவில் இருந்து தூக்கியெறியாமல் மென்று விழுங்குவோம்...
உடலுக்கு ஆரோக்கியம் தரும் கடுகு,சீரகம்,ஏலக்காய்

உணவு வகைகளில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் வாசனை பொருட்களாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.


 அவை, உணவுக்கு வாசனை மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருபவை. அந்த வாசனைப் பொருட்களை, தற்போதும் சமையலில் பயன்படுத்தி வந்தாலும், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. உணவில் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் குறித்து, இந்திய பயிர் பதன தொழில் நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:

பட்டை: செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது.

ஜாதிக்காய்: பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டம், ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

கிராம்பு: நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இஞ்சி : மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும்.

புதினா: ஜீரண உறுப்பை சீர்செய்து, மலச்சிக்கலை குறைக்கும் தன்மை இதில் உள்ளது. உணவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை தடுக்கும் திறன் வாய்ந்தது.

ஏலக்காய்: வாயுவை நீக்குதல், ஜீரண உறுப்புகளை திடப்படுத்துதல், சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி குறைத்தல் போன்ற பணிகளை ஏலக்காய் செய்கிறது. ஏலக்காய் ஊறவைத்த நீர் தொண்டை உலர்வதை தடுக்கும்.

மல்லி: செரிமானத்திற்கு உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும்.

மஞ்சள்: காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை தவிர்க்கலாம். குடல் நோய்கள் மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும். இதன் சாறு படர்தாமரையை குணப்படுத்தும்.

சோம்பு: வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.

பெருங்காயம்: கக்குவான், இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.

சீரகம்: சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும்.

வெந்தயம்: நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.

கடுகு: இதில் உள்ள சல்பர், அப்லோ டாக்சின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்கும். இருமல், நீரிழிவு, பக்கவாதம், தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

பூண்டு: வயிற்றுபோக்கு மற்றும் வாயுவை தவிர்க்க உதவுகிறது. காயங்கள், கொப்புளங்கள் மீது பூண்டை தடவினால் விரைவில் குணமடையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது. மூலத்தை குணப்படுத்துகிறது.

ஓமம்: இதன் தைலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதன் எண்ணெய் நுண்ணுயிர்களை அழிக்கும். வாயு தொல்லை, வயிற்றுபோக்கு, வாந்தி, வயிற்று வலி, ஜலதோஷம், புண், சிரங்கு, தொண்டை கோளாறு தீர்க்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.




யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?

கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், ஆர...ோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். கீரை சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்தது தான். கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை- அரைக்கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்.

கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி' போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும். கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ' ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

கீரைகளிலுள்ள கரோட்டின் சத்துப்பொருள் அப்படியே நம் உடலுக்கு கிடைக்க கீரைகளை நீண்ட நேரம் வேக வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கேரட்டின் சிதைந்து விடுகிறது. கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்' வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு இது.........

பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம். பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு 50 கிராம். கீரை வகைகள் சிறு பிள்ளைகளுக்கு வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலான தாய்மார்கள் கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர். பாக்டிரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலமோ கீரைகள் மாசுபடுகிறது.

எனவே கீரைகளை நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் உணவில் சேர்க்கும் போது வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தலாம். நன்கு கழுவி சுத்தம் செய்து சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை வராது. கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும். கீரைகளை வெயிலில் உலர்த்தக்கூடாது. அப்படி செய்தால் அவற்றில் உள்ள கரோட்டீன் சத்து வீணாகி விடும். கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்


உளுந்தின் பயன்களைப்பற்றிய தகவல் !!! (Black Gram)

இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும்.

இந்திய உணவில் இரண்டு வகை உண்டு.
...
தென்னிந்திய உணவு வகை,

வட இந்திய உணவு வகை.

தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது.

இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று. இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம்நன்கு வெண்மையாகவும் காணப்படும்.

இந்தியாவில் அனைத்து பகுதியிலும் பயிராகும் ஒருவகை செடியாகும். பணப்பயிர்களில் இதுவும் ஒன்று.கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்

பலாப்பழம் எனும் அற்புதப் பழத்தை உண்டால் ?

கண்ணை கவரும் நிறத்தில் இருக்கும் பலாப்பழம் உடலுக்கு மிகவும் சிறந்த ஒன்று. அதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி மற்றும் தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இத்தகைய பழத்தை உண்பதால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்ப்போமா!!!

1. பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை க...ுறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.

2. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

3. ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றைப் பிளிந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும்.

4. தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

5. குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. தேலும் இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

6. வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.

7. நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.

ஆகவே இந்த அற்புதப் பழத்தை உண்டால், ஆரோக்கியமாக வாழலாம்.
 
வாழைப்பழம் ஒரு 'ஞானப்பழம்'!!

வாழைப்பழம் மருத்துவகுணம் கொண்டதோடு மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழை...ப்பழம் எளிமையான விலை குறைவான ஊட்டச்சத்து மிக்க உணவாகும். இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

பூவன் பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது. பேயன் பழம் குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும். மலைவாழை சோகையை நீக்கும். எளிதில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை. ரஸ்தாலி இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.

காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.

பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள். இந்த பொட்டாசியம் சத்து மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, குழந்தையின் கற்கும் திறன் அதிகரித்தது.

பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது.

இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

No comments:

Post a Comment