Wednesday, May 23, 2012

27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான தமிழ்ப்பெயர்கள்

 

அசுபதி/அஸ்வினியை புரவி என்றும்,

 பரணியை அடுப்பு என்றும்,
கார்த்திகை/கிருத்திகையை ஆரல் என்றும்,
ரோகிணியை சகடு என்றும்,மிருகசீரிடத்தை மான்றலை என்றும்,
திருவாதிரையை மூதிரை என்றும்
புனர்பூசத்தை கழை என்றும்,
பூசத்தை கொடிறு என்றும்,
ஆயில்யத்தை அரவு என்றும்,
மகத்தை கொடுநுகம் என்றும்,
பூரத்தை கணை என்றும்,
உத்திரத்தை உத்தரம் என்றும்,
அஸ்தத்தை கை என்றும்,
சித்திரையை அனுபை என்றும்,
சுவாதியை விளக்கு என்றும்,
விசாகத்தை முறம் என்றும்,
அனுஷத்தை பனை என்றும்,
கேட்டையை துலங்கொலி என்றும்,
மூலத்தை குருகு என்றும், பூராடத்தை முற்குலம் என்றும்,
உத்திராடத்தை கடைக்குலம் என்றும்,
திருவோணத்தை முக்கோல் என்றும்,
அவிட்டத்தை காக்கை என்றும்,
சதயத்தை செக்கு என்றும்,
பூரட்டாதியை நாழி என்றும்,
உத்திரட்டாதியைஅ முரசு என்றும்,
ரேவதியை தோணி என்றும் நமது முன்னோர்களாகிய சித்தர்கள் பரிபாஷையாக வைத்திருந்தனர்.

சித்திரை மாதத்தை மேழம் என்றும்,
வைகாசியை விடை என்றும்,
ஆனியை ஆடவை என்றும்,
ஆடியை கடகம் என்றும்,
ஆவணியை மடங்கல் என்றும்,
புரட்டாசியை கன்னி என்றும்,
 ஐப்பசியை துலை என்றும், கார்த்திகையை நளி என்றும்,
 மார்கழியை சிலை என்றும்,
தையை சுறவம் என்றும்,
மாசியை கும்பம் என்றும்,
பங்குனியை மீனம் என்றும் பயன்படுத்திவந்தனர்.இவைகளை தற்காலத்தில் தமிழறிஞர்களும்,தமிழ் காவலர்களும் பயன்படுத்தி வருகின்றனர்

2 comments:

  1. மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள்! ஒரு பத்தாண்டுக்கு முன்னாடி மக்களிடையே இருந்த கொஞ்சநஞ்ச அமைதி கூட இப்ப கிடையாது. எங்கடா நிம்மதி கிடைக்கும், எப்படா லீவு கிடைக்கும், எதைடா கொண்டாடலாம்னு அலையிறாங்க! புதுசு புதுசா அட்சய த்ரிதியை மாதிரி பண்டிகைகளை வேற நம்ம தொழிலதிபர்கள் invent பண்ணி மக்கள் பர்சுகளை காலி பண்ணுறாங்க. ஆனா மக்களும் "எப்படியோ நமக்கு ஒரு விழா கிடைச்சா சரி"னு எல்லாத்தையும் கொண்டாடிறாய்ங்க பாவம்! நிலமை இப்படி இருக்கப்ப இத்தன வருசமா கொண்டாடிட்டு வந்த ஒரு பண்டிகைய "அன்னைக்கு பண்டிகையே இல்லடா கொண்டாடாத"னு சொன்ன்னா என்ன ஆகும்? லீவு நாள்ல ஸ்கூல் வச்சா ஸ்கூல் பசங்க எப்டி வருத்தப்படுவாங்களோ நம்ம மக்கள் அப்படி வருத்தப்பட ஆரம்பிச்சுட்டாங்க. சொல்றவனை பேட் வர்ட்ஸ்ல திட்ட ஆரம்பிச்சுட்டாங்க! இப்ப நம்ம என்ன செய்யிறது?

    இஸ்லாமியர்களுக்கு அரபி மொழி எப்படியோ அப்படிதான் இந்துக்களுக்கு சமஸ்கிருதம். இப்ப இந்த ஏப்ரல்13ல பிறக்குற வருடங்களான பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச , ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய ஆகிய வருடங்கள் சுழற்சி முறையில மீண்டும் மீண்டும் வரும். இப்படி மொத்தம் அறுபது வருடங்கள் இருக்கு. இதுல ஒரு வருடத்தின் பெயர் கூட தமிழ் இல்ல. எல்லாமே சம்ஸ்கிருதம்.

    சமஸ்கிருதமும், தமிழும் முற்றிலும் வெவ்வேறு மொழிக்குடும்பங்களைச் சேர்ந்தவை. கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத இரு மொழிகள். இப்படியிருக்க, தமிழ் வருடங்கள் எப்படி சமஸ்கிருதத்தில் இருக்க முடியும்? அதாவது இனக்கலப்பே இல்லாத ஒரு கொட்டாம்பட்டி தமிழனோட பாட்டி எப்படி பமீலா ஆண்டர்சன் மாதிரி இருக்க முடியும்? யோசிங்க மக்களே! கலைஞர், பாரதிதாசன் சொன்னதையெல்லாம் விட்ருங்க. நமக்கு மூளை இருக்கு. கையில லாஜிக் இருக்கு. நீங்களே யோசிங்க!

    அதனாலதான் சொல்றேன்... இது இந்துக்களின் பண்டிகை. சமஸ்கிருத பண்டிகை. சமஸ்கிருதத்தை தங்கள் தெய்வங்களின் தேவ பாஷையாக (ரஜினி படையப்பால சொல்வாரே, "இது சம்ஸ்க்ருதம். தேவபாஷை. தப்பா உச்சரிச்சா தீட்டு"னு அது மாதிரி) கருதும் இந்துக்களின் புத்தாண்டு. இந்துக்களுக்கு மட்டுமான புத்தாண்டு. சமஸ்கிருத புத்தாண்டு.
    அதனால் இந்துப் புத்தாண்டை கொண்டாடும் என் நண்பர்கள் அனைவருக்கும் என் மனம்நிறைந்த இந்துப்புத்தாண்டு அல்லது சமஸ்கிருத புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு, பண்பாடு, பழக்க வழக்கம், இதை மீற முடியாது என்று சொல்லியே தங்கள் ஆதிக்க மதிப்பீடுகளைப் பாதுகாத்து வருகின்றனர். இதற்கு நாம் பலியாகி விடக்கூடாது.

    ReplyDelete