Monday, May 21, 2012

பல பெயர்கள் எனக்குண்டு..

பல பெயர்கள் எனக்குண்டு..

இனத்தை நேசிப்பதால் இனவாதி..
மொழி பற்றோடிருப்பதால் மொழி வெறியன்..
அடக்குமுறையை வெறுப்பதால் தீவிரவாதி...
... அதிகாரம் எதிர்ப்பதால் பயங்கரவாதி..
விடுதலைக்கு கூவுவதால் கூச்சல்காரன்..
சமூக அக்கறை இருப்பதால் வேலை இல்லாதவன்..
பணம் சேர்க்காததால் கேனையன்..
அடிக்கடி அரசியல் பேசுவதால் உருப்படாதவன்..
சாதி மறைப்பதால் நடிகன்...
பார்ப்பனியத்தை எதிர்ப்பதால் பரதேசி..
இட ஒதுக்கீடை ஆதரிப்பதால் அக்கிரமக்காரன்...
தமிழ்த்தேசியம் பேசுவதால் வன்முறையாளன்..
இந்தியத்தை எதிர்ப்பதால் மாவோயிஸ்ட்..
ஈழத்தை நேசிப்பதால் புலி...

மொத்தத்தில் வீணாப்போன வெறும்பய என்ற கொள்கைக்காரன்...
 
பிறப்பில் வருவது யாதென கேட்டேன் பிறந்து பார் என இறைவன் பனித்தான்

இறப்பில் வருவது யாதென கேட்டேன் இறந்து பார் என இறைவன் பனித்தான்

வாழ்வில் வருவது யாதென கேட்டேன் வாழ்ந்து பார் என இறைவன் பனித்தான்
...
அனுபவித்தே தான் வாழ்வது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏன்? என கேட்டேன்

ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அனுபவம் என்பதே நான்தான் என்றான்.

நான் காட்டாற்று வெள்ளத்தில் கரைந்துபோகும் களிமண் இல்லை, அக்காட்டாற்று வெள்ளத்தின் போக்கையே திசை திருப்பிவிடும் பாறை."

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்,
வாசல்தோறும் வேதனை இருக்கும்.
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

தேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

No comments:

Post a Comment