Friday, October 19, 2012

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!


மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

Thursday, October 18, 2012

கதைகள்

ஆற்றில் வெள்ளம்
கரை புரண்டு ஓடுகிறது.
இக்கரையில் இரண்டு பேர்
நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை.
எப்படி அக்கரைக்குப்
போவது?

இந்த நேரத்தில்
ஒரு காளை மாடு அங்கே வந்தது.
அதுவும் அக்கரைக்குப்
போக வேண்டும்.
ஆனாலும் அதற்கு ஓடம்
எதுவும்
தேவைப்படவில்லை.
அப்படியே ஆற்றில்
பாய்ந்தது... நீந்த
ஆரம்பித்தது. இதைப்
பார்த்த இரண்டு பேரில்
ஒருத்தன் குபீர்
என்று ஆற்றில்
குதித்தான். அந்தக்
காளை மாட்டின் வாலைக்
கெட்டியாகப் பிடித்துக்
கொண்டான்.
காளை மாடு சுலபமாக
அவனை இழுத்துச்
சென்று அக்கரையில்
சேர்த்துவிட்டது.
அடுத்தவன் பார்த்தான்.
நமக்கு ஒரு ‘வால்’
கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய்
வந்து ஆற்றில் குதித்தது.
இதுதான் நேரம்
என்று இவனும் ஆற்றில்
விழுந்து அந்த நாயின்
வாலைப் பிடித்துக்
கொண்டான். இந்த
மனிதனையும் இழுத்துக்
கொண்டு நாயால் ஆற்றில்
நீந்த முடியவில்லை.
திணறியது.
ஒரு கட்டத்தில் நாய்,
‘வாள்... வாள்’ என்று கத்த
ஆரம்பித்து விட்டது.
விளைவு _
இருவருமே ஆற்று நீர்
போகும்
திசையிலேயே மிதந்து போய்க்
கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் போக வேண்டிய
திசை வேறு.
போய்க் கொண்டிருக்கிற
திசை வேறு.
கரை சேர நினைக்கிற
மனிதர்களின் கதை இது.
சிலர்
கரையிலேயே நின்று விடுகிறார்கள்.
சிலர் காளையின் வாலைப்
பிடித்துக்
கொள்கிறார்கள். சிலர்
நாயின் வாலைப் பற்றிக்
கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன
சொல்கிறது தெரியுமா?
நீங்கள் கரை சேர
விரும்புகிறீர்களா?
அப்படியானால் எதையும்
பற்றிக் கொள்ளாதீர்கள்.
ஏற்கெனவே பற்றிக்
கொண்டிருப்பதை எல்லாம்
விட்டு விடுங்கள்!

ஆற்றின்
நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது.
உள்ளே ஏதாவது பொருள்
இருக்கும் என்கிற
ஆசையில் ஒருத்தன் நீந்திச்
சென்று அதைப்
பற்றுகிறான். நீண்ட நேரம்
ஆகியும்
கரை திரும்பவில்லை.
நடு ஆற்றில் போராடிக்
கொண்டிருக்கிறான்.
கரையில்
நின்று கொண்டிருக்கிற
நண்பர்கள் கத்துகிறார்கள்...
‘‘நண்பா...
கம்பளி மூட்டையை இழுத்துக்
கொண்டு உன்னால் வர
முடியவில்லை என்றால்
பரவாயில்லை...
அதை விட்டுவிடு!’’
ஆற்றின்
நடுவே இருந்து அவன்
அலறுகிறான்: ‘‘நான்
இதை எப்பவோ விட்டுட்டேன்...
இப்ப இதுதான்
என்னை விடமாட்டேங்குது
. ஏன்னா,
இது கம்பளி மூட்டை இல்லே.
கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள்
தடுமாறிப் போகிறார்கள்.
சரியாகப் பற்றுகிறவர்கள்
கரையேறி விடுகிறார்கள்.
பற்றையே விடுகிறவர்கள்
கடவுளாகி விடுகிறார்கள்!"

Friday, October 12, 2012

கலியுகத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களும் அதில் வியாபிக்கக்கூடிய சூழ்நிலைகள்

பல புராணங்களில் கலியுகத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களும் அதில் வியாபிக்கக்கூடிய சூழ்நிலைகள் வருணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை காண்போம்:

• திருடர்கள் அரசர்களாவார்கள், அரசர்கள் திருடர்களாவார்கள்.
• ஆட்சியாளர்கள் (மக்களின்) செல்வங்களை திருடி அவற்றை துஷ்பிரயோகம் செய்வார்கள்.
• அவர்கள் (ஆட்சியாளர்கள்) மக்களை காத்திடமாட்டார்கள்
• சிறிதளவே கல்வியறிவு பெற்ற (அதையும் பயன்படுத்திட தெரியாத) வீனர்கள் ஞானி
கள் என போற்றப்படுவர்
• அகதிகளாக பலர் நாடு விட்டு நாடு செல்வார்கள்
• தாயின் கர்ப்பத்திலேயே சிசுக்கள் கொலை செய்யப்படுவார்கள்
• தவறான கருத்துக்களையே மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள்
• எவரையுமே நம்ப முடியாமல் போகும்
• மக்கள் பொறாமை நிறைந்திருப்பார்கள்
• பிறக்கும் பல குழந்தைகள் வாலிப வயதை தாண்டமாட்டர்கள்
• பசியாலும் பயத்தினாலும் மக்கள் நிலவரைகளுக்குள் தஞ்சம் புகுவார்கள்
• இளம் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை விலை பேசுவார்கள்
• மேகங்கள் சீராக மழை பொழிய மாட்டா.
• வணிகர்கள் நேர்மையற்ற வணிகத்தில் ஈடுபடுவார்கள்
• பிச்சைக்காரர்களும் வேலையற்றோரும் நிறைந்திருப்பார்கள்
• கடுமையான மற்றும் கொச்சையான மொழிகளை மக்கள் பயன்படு்த்துவார்கள்
• செல்வம் சேர்ப்பதிலேயே மக்கள் ஈடுபடுவார்கள், பணங்காரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்
• ஆட்சி தலைவர்கள் மக்களை காத்திடாமல், வரிகளின் மூலம் செல்வங்களை பறித்துக்கொள்வார்கள்
• நீர் கிடைக்காமல் போகும்
• விரைவுணவு எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும்

மேற்கண்ட சம்பவங்கள் சில உதாரணங்களே ஆகும். பல புராணங்களில் கலியுகத்தில் மனிதர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிலை குறித்த பன்மடங்கான தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடுவதற்கு இடம் போதாது. புராணங்கள் குறிப்பிடாதவையாக கடந்த சில நூற்றாண்டுகளாக புராணங்கள் கூட எதிர்ப்பார்க்காத அளவு உலகில் நாசங்கள் பெருகியும் நடந்தும் உள்ளன. உதாரணத்திற்கு முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களும் அதன் விளைவாக உலகில் ஏற்பட்ட நாசங்கள். அரசர்களின் இராஜ்ஜியங்கள் கவிழ்ந்து உலகில் மக்களாட்சி முறை ஏற்பட்டு, அதுவும் சில வேளைகளில் கவிழ்ந்து கம்யூனிச சித்தாந்தத்தின் ஆதிக்கம், சர்வாதிகார ஆட்சிமுறைகள், மற்றும் சமயசர்வாதிகார ஆட்சிமுறைகள் போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். மேலும் ஐரோப்பாவில் பிளேக் நோய் மற்றும் பிற நோய்ளினாலும், இயற்கை பேரிடர்களினாலும் மக்கள் கோடிக்கணக்கில் அழிவுற்றதையும் இங்கு குறிப்பிடலாம். முதலாம் உலக யுத்தம் முடிந்து சில வருடங்களில் இன்ஃபுலுவென்ஸா நோயினால் சுமார் 10கோடி மக்கள் மாண்டனர். இன்று மத்திய கிழக்கில் சிறிய பொறியினால் கூட பெரும் போர்த்தீ வெடிக்கும் அபாயத்தையும் இங்கு குறிப்பிடலாம். கலியுகத்தின் லக்ஷனம் இவ்வாறாகவே இருக்கின்றது.

Thursday, October 11, 2012

அதிமதுரம்..! மருத்துவ குணங்கள்..!

அதிமதுரம்..!
மருத்துவ குணங்கள்..!
ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமேஅதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.
செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...
அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.
கல்லடைப்பு நீங்க...
ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
இருமல் நீங்க...
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...
அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்­ரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.
மஞ்சள் காமாலை நீங்க...
அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.
சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...
அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.
பெண் மலடு நீங்க...
பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
மலச்சிக்கல் நீங்க...
அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
சூடு தணிந்து சுறுசுறுப்பாக...
சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்­ர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.
ரத்த வாந்தி நிற்க...
அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
தாய்ப்பால் பெருக....
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.
வரட்டு இருமல் நீங்க...
அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்­ர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
இளநரை நீக்க...
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.
நெஞ்சுச் சளி நீங்க....
அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்­ரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
இருமல் நீங்க...
அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..
மஞ்சள்காமாலை தீர...
அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.
தாது விருத்திக்கு...
அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.
கருத்தரிக்க உதவும்...
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
வழுக்கை நீங்கி முடி வளர ....
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.
தலைவலிகள் நீக்க...
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.
நன்றி: மூலிகைவளம்
தொண்டை கரகரப்பு நீங்க...
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...
பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்

Friday, October 5, 2012

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?



சமையலுக்கு பயன்படும் வெங்காயம், சாப்பிட மட்டும் தான் பயன்படுகிறது என்று தான் தெரியும். ஆனால் அந்த அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம், அந்த வெங்காயம் ருசிக்கு மட்டுமின்றி சிலவற்றை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. அதிலும் சமையலறையில் இருக்கும் சிலவற்றிற்கே பயன்படுகிறது. ஆகவே மறுமுறை சமைக்கும் போது, தேவையில்லாமல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூக்கிப் போடாமல், வேறு சில செயல்களுக்கும் பயன்படுத்துங்கள். இப்போது அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று பார்ப்போமா!!!

வெங்காயத்தின் மற்ற நன்மைகள்

மெட்டல் பொருட்கள்

சமைக்கப் பயன்படும் வெங்காயம் சாப்பிடமட்டுமல்லாமல், மெட்டல் பொருட்களில் படியும் கறைகள், துரு போன்றவற்றை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே இனிமேல் ஏதாவது மெட்டல் பொருட்களில் துரு அல்லது கறைகள் போகாமல் இருந்தால், அப்போது சிறு துண்டு வெங்காயத்தை எடுத்து அதன்மீது தேய்த்தால், போய்விடும். இதனால் மெட்டல் பொருட்கள் அழகாக மின்னும்.

வாணலி

பொதுவாக சமைக்கும் போது எண்ணெய் எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? வாணலியில் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று தானே பயன்படுத்துகிறோம். ஆனால், இப்போது அதே பயன்பாட்டிற்கு தான் வெங்காயமும் பயன்படுகிறது. அதாவது வாணலியை அடுப்பில் வைக்கும் முன் சிறிது வெங்காயத்தை எடுத்து தேய்த்து, பின் சமைத்தால், அடிபிடிக்காமல் இருக்கும்.

கறைகள்

வெங்காயம் சமையலறையில் உள்ள கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. அதாவது சமைக்கும் போது பாத்திரத்தின் அடியில் உள்ள கருப்பு நிறம் நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் வைத்து, அவற்றை நீக்க முடியாமல் இருந்தால், அப்போது வெங்காயத்தை வைத்து அந்த இடத்தை தேய்த்தால், கறைகள் நீக்கிவிடும்.

கிரில் மிசின்

வீட்டில் பயன்படும் சமையல் பொருட்களில் ஒன்றான கிரில் மிசின், தீயில் நீண்ட நேரம் இருப்பதால், அது கருமை நிறத்தில் இருக்கும் வாங்கும் போது தான் புதிதாக பளிச்சென்று இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், அதை இப்போது புதிது போல் மின்னச் செய்ய, அதன் இரு முனைகளிலும் வெங்காயத் துண்டை வைத்து, நன்கு தேய்க்க வேண்டும். இதனால் அந்த கிரில் மிசின் அழகாகக் காணப்படும்.

நாற்றம்

வீட்டில் இருக்கும் போது திடீரென்று எதாவது ஒரு மூலையிலிருந்து அழுகிய நாற்றம் வரும். அப்போது எவ்வளவு நேரம் தான் மூக்கை மூட முடியும். ஆகவே அப்போது சிறிது வெங்காயத்தை நறுக்கி, நாற்றம் அடிக்கும் இடத்தில் வைத்துவிட்டால், அந்த அழுகிய நாற்றம் போய்விடும்.

Thursday, October 4, 2012

மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்.

நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.வலது நாசி சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும். இரண்டு நாசிகளிலும் மூச்சுக் காற்று வந்தால் சுழிமுனை என்பர்.பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரியகலையில் ஓடும். ஆதிக வெயில் அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும். இது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும். ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும் சமநிலையில் இருக்க வேண்டும்.இதில்
எந்த குறைபாடு நேர்ந்தாலும் நமது உடலில் பல உபாதைகள் ஏற்படும். ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில் மரணம் சம்பவிக்கும். மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும். சுவாசத்தை அடக்குவதால் ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்கின்றன. நாம் நடக்கும் போது 16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12 அங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடல்உறவு கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம் நடைபெறுகிறது.
சுவாசம் 11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்.
10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்.
9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.
8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்.
7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான். 6அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.
5 அங்குலமாக குறைந்தால் காய சித்து உண்டாகும்
4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து உண்டாகும்.
3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட சஞ்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல் சித்திக்கும்.
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம், உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை அன்னபாணம் நீங்கும்