Tuesday, April 2, 2013

சிதம்பர ரகசியத்தை பற்றி


சிதம்பர ரகசியத்தை பற்றி தெரிந்து கொண்டீர்கள் அல்லவா ...

மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது.

பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது..

பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது.

கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது.

இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச (5)பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சித்+அம்பரம்=சிதம்பரம். சித்அறிவு. அம்பரம்-வெட்டவெளி. மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.மாயை விளக்கி இ ஆகாய ரூபமாக உள்ள இறைவனை காணுங்கள் .

மேலும் பல சிறப்புகளைக்கொண்டது அத்திருக்கோயில்.. முக்கியமானவற்றை உங்களோடு பகிர்ந்து கொண்டோம்..

இத்துடன் சிதம்பரம் நடராஜ பெருமாள் கோயிலைப்பற்றிய பதிவுகள் நிறைவடைகின்றது .

No comments:

Post a Comment