Friday, October 12, 2012

கலியுகத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களும் அதில் வியாபிக்கக்கூடிய சூழ்நிலைகள்

பல புராணங்களில் கலியுகத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களும் அதில் வியாபிக்கக்கூடிய சூழ்நிலைகள் வருணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை காண்போம்:

• திருடர்கள் அரசர்களாவார்கள், அரசர்கள் திருடர்களாவார்கள்.
• ஆட்சியாளர்கள் (மக்களின்) செல்வங்களை திருடி அவற்றை துஷ்பிரயோகம் செய்வார்கள்.
• அவர்கள் (ஆட்சியாளர்கள்) மக்களை காத்திடமாட்டார்கள்
• சிறிதளவே கல்வியறிவு பெற்ற (அதையும் பயன்படுத்திட தெரியாத) வீனர்கள் ஞானி
கள் என போற்றப்படுவர்
• அகதிகளாக பலர் நாடு விட்டு நாடு செல்வார்கள்
• தாயின் கர்ப்பத்திலேயே சிசுக்கள் கொலை செய்யப்படுவார்கள்
• தவறான கருத்துக்களையே மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள்
• எவரையுமே நம்ப முடியாமல் போகும்
• மக்கள் பொறாமை நிறைந்திருப்பார்கள்
• பிறக்கும் பல குழந்தைகள் வாலிப வயதை தாண்டமாட்டர்கள்
• பசியாலும் பயத்தினாலும் மக்கள் நிலவரைகளுக்குள் தஞ்சம் புகுவார்கள்
• இளம் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை விலை பேசுவார்கள்
• மேகங்கள் சீராக மழை பொழிய மாட்டா.
• வணிகர்கள் நேர்மையற்ற வணிகத்தில் ஈடுபடுவார்கள்
• பிச்சைக்காரர்களும் வேலையற்றோரும் நிறைந்திருப்பார்கள்
• கடுமையான மற்றும் கொச்சையான மொழிகளை மக்கள் பயன்படு்த்துவார்கள்
• செல்வம் சேர்ப்பதிலேயே மக்கள் ஈடுபடுவார்கள், பணங்காரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்
• ஆட்சி தலைவர்கள் மக்களை காத்திடாமல், வரிகளின் மூலம் செல்வங்களை பறித்துக்கொள்வார்கள்
• நீர் கிடைக்காமல் போகும்
• விரைவுணவு எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும்

மேற்கண்ட சம்பவங்கள் சில உதாரணங்களே ஆகும். பல புராணங்களில் கலியுகத்தில் மனிதர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிலை குறித்த பன்மடங்கான தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடுவதற்கு இடம் போதாது. புராணங்கள் குறிப்பிடாதவையாக கடந்த சில நூற்றாண்டுகளாக புராணங்கள் கூட எதிர்ப்பார்க்காத அளவு உலகில் நாசங்கள் பெருகியும் நடந்தும் உள்ளன. உதாரணத்திற்கு முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களும் அதன் விளைவாக உலகில் ஏற்பட்ட நாசங்கள். அரசர்களின் இராஜ்ஜியங்கள் கவிழ்ந்து உலகில் மக்களாட்சி முறை ஏற்பட்டு, அதுவும் சில வேளைகளில் கவிழ்ந்து கம்யூனிச சித்தாந்தத்தின் ஆதிக்கம், சர்வாதிகார ஆட்சிமுறைகள், மற்றும் சமயசர்வாதிகார ஆட்சிமுறைகள் போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். மேலும் ஐரோப்பாவில் பிளேக் நோய் மற்றும் பிற நோய்ளினாலும், இயற்கை பேரிடர்களினாலும் மக்கள் கோடிக்கணக்கில் அழிவுற்றதையும் இங்கு குறிப்பிடலாம். முதலாம் உலக யுத்தம் முடிந்து சில வருடங்களில் இன்ஃபுலுவென்ஸா நோயினால் சுமார் 10கோடி மக்கள் மாண்டனர். இன்று மத்திய கிழக்கில் சிறிய பொறியினால் கூட பெரும் போர்த்தீ வெடிக்கும் அபாயத்தையும் இங்கு குறிப்பிடலாம். கலியுகத்தின் லக்ஷனம் இவ்வாறாகவே இருக்கின்றது.

No comments:

Post a Comment