Friday, May 18, 2012

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது! என ஔவையார் கூறியது எதற்க்காக? அறிய வேண்டாமா?


ஆன்மிக சிந்தனைகள்

  * வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு முதலில் தன்னம்பிக்கையும், அடுத்தபடியாய் இறைவன் மீது நம்பிக்கையும் வேண்டும்.
...
* புகழ்ச்சியையும், அவமதிப்பையும் கருதாது என்றும் உண்மையை மேற்கொண்டு செய்யும் தியாகமே, சிறந்த தியாகம்.

* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அவனே வாழத் தகுதியுள்ளவன்.

* நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது முதற்கடமை. முன்னேற்றமடைவதற்கு முதலில் சுயநம்பிக்கை அவசியம்.

* உலக நன்மைக்காக அவசியமாயின் உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யுங்கள், தூய்மை உடையவன் தான் கடவுளை மிக நெருக்கமானவன் ஆகிறான்.

* உங்களை ஓர் ஏழை என்று எப்போதும் நினைக்காதீர்கள், பணம் சக்தியல்ல, நன்மையும் தெய்வ பக்தியுமே சக்தி.

நியாயத்திற்கு நன்மை உறுதி

* வேலை செய்யாமல் பிறரிடம் பணம் பெறுவது பிச்சை எடுப்பதற்கு சமம். எவ்விதமான வேலையும் இல்லாமல் இருப்பவனைப் பார்ப்பது கூட, நமக்குத் தீமையை உண்டாக்கும்.
...
* பழிக்குப்பழி வாங்கியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் தண்டனை தரும் அதிகாரம் மனிதர் யாருக்கும் கிடையாது.

* பிறர் குற்றங்களை மன்னிக்கும் உயர்ந்த குணம், குற்றமற்ற நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.

* நியாயத்தராசை வைத்திருப்பவனின் கையில் ஆள்பலம், சொல்வலிமை, பணம் போன்ற எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

* பிச்சை எடுப்பவனிடம் மான உணர்வு இருக்காது. உள்ள உறுதி மிக்கவன் யாரிடமும் இலவசமாக எதையும் பெற விரும்புவதில்லை.

* உடலை வெற்றி கொள்ள முயலுங்கள். அது எப்போதும் நீங்கள் இட்ட கட்டளைக்குப் பணியும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

* அகங்காரத்தைக் களைந்தால் தெய்வ சக்தியும், ஞானமும் ஏற்படும்.
 



4 comments:

  1. தமிழை சிந்தனையுடன் ஊட்டுவது சாலவும் நன்று.

    கொன்றை வேந்தன் -ஔவையார்
    1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
    2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
    3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
    4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
    5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
    6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
    7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
    8. ஏவா மக்கள் மூவா மருந்து.
    9. ஐயம் புகினும் செய்வன செய்.
    10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
    11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
    12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
    13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு

    ஆத்திசூடி
    1.அறம் செய விரும்பு.
    2.ஆறுவது சினம் .
    3.இயல்வது கரவேல்.
    4.ஈவது விலக்கேல்.
    5.உடையது விளம்பேல்.
    6.ஊக்கமது கைவிடேல் .
    7.எண் எழுத்து இகழேல்.
    8.ஏற்பது இகழ்ச்சி .
    9.ஐயமிட்டுண்.
    10.ஒப்புர வொழுகு .
    11.ஓதுவது ஒழியேல்.
    12.ஒளவியம் பேசேல்.

    ReplyDelete
  2. அறம் செய்ய விரும்பு.

    இதற்கு நம்மவர்கள் கொடுக்கும் விளக்கம் இருக்கே...எழுதியவன் ஏட்டை கெடுத்தான்.பாடியவன் பாட்டை கெடுத்தான் என்னும் கதையை போல உள்ளது.

    திருமூலர் அறத்தை பற்றி பின்வருமாறு உரைக்கிறார்.

    ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
    ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
    ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
    ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

    ஞானத்திற்கும் மேலான ஓர் அறநெறி உலகத்தில் இல்லை. இருப்பதாகக் கருதும் சமயம் யாதேனும் உண்டாகுமானால், அது நல்ல சமயம் ஆகாது. ஞானத்தின் நீங்கிய எந்தச் சாதனங்களும் முடிநிலை முத்தியைத் தரமாட்டா. அதனால், ஞானத்திற் சிறந் தவர்களே மக்களுட் சிறந்தவராவர்.

    உலகத்தில் ஒருவர் பலவற்றை கற்றாலும் தன்னைபற்றி தனது உண்மை இயல்பை பற்றி அறியவில்லை எனில் அது வீணே.தன்னை அறிதலே தலையாய அறமாகும்.

    திருக்குறளில் வள்ளுவர் அறத்தை இல்லறம்,துறவறம் என்று இருவகையாக பிரித்துள்ளார்.இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் இன்னது அறம் என உரைக்கிறார்.

    இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு.

    (இங்கே இருமை என்பது பல்வேறு பொருளுடையது.)

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
    ஆகுல நீர பிற.

    அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
    பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

    முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்
    இன்சொ லினதே அறம்.


    அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்றது அறம்.

    தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
    அருளாதான் செய்யும் அறம்.

    பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு.

    இல்லறம் அல்லது நல்லறம் அன்று.(ஔவை )

    ஒவ்வொன்றிற்கும் விளக்கம் அளித்தால் நீண்ட கட்டுரை ஆகிவிடும்.(தேவைபடின் அதையும் செய்வோம்.)
    ஔவை அறத்தை ஒருவரியில் வடித்துவிட்டாள்

    ReplyDelete
  3. மறந்து கொண்டே இருப்பது
    மக்களின் இயல்பு
    நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
    இருப்பது எம் கடமை"

    ReplyDelete