Sunday, June 17, 2012

மலரும் நினைவுகள் நம்ம ஊர் தட்டான் தும்பி !!! ( Dragon fly )




வசந்தகாலம் வந்துவிட்டால் பறவைகள் நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் வந்து முட்டையிட்டு, குஞ்சு பொரித்து அந்தக் குஞ்சுகளுடன் தாய்நாடு திரும்பும், இப்படி வந்து போகிற பறவைகளை நம் நாட்டில் நிறைய சரணாலயத்தில் பார்த்து இருக்கிறேம் கேள்விப்பட்டிருக்கிறேம்.இது இல்லாமல் வண்ணத்துப் பூச்சிகளும் நீண்டதுரம் 4ஆயிரத்து 300 மைல் துரம் பயணிப்பாதாக கேள்விப்பட்டிருக்கிறேம். இதெல்லாம் இல்லாமல் நம்ம ஊரில் மழை காலம் முடிந்தவுடன் ஒரு பூச்சி இணம் பறக்கும் அதுதான் 'தட்டான் பூச்சி' (தும்பினும்) சொல்வார்கள்.

இதுவும் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கிறது 12 ஆயிரம் மைல்கள் பயணம் செய்கிறது நம் தமிழ் நாட்டு தட்டான்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட்டு மாதம் தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டு அக்டோபர் ம்தம் மாலத்தீவை அடைகிறது. பின்னர் அங்கிருந்து நவம்பரில் செகேல்ஸ் தீ...வை அடைகிறது. டிசம்பரில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மொசம்பிக் நகரை அடைகிறது. அங்கு இருந்து ஏப்ரல் மாதம் மாலத்தீவு வழியாக மீண்டும் இந்தியா திரும்புகிறது. இதில் ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்னவெனில் அவை ஒவ்வொரு இடத்திலும் சில நாட்களே தங்குகின்றன. இடையே 600 மிதல் 800 கிலோமீட்டர் தூரம் கடலை கடக்கின்றன.

இவை 3 ஆயிரத்து 200 அடி உடரத்தில் பறக்கின்றன. தாழ்வாக பறந்தால் காற்றிந் வேகம் தட்டாந்களை தள்ளிவிட்டு திசை மாற்றிவிடக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.இதில்சுவராசியமான விசயம் என்னவென்றால் இப்படி நீண்டதூரம் கண்டம் விட்டு கண்டம் செல்வதற்கு அவற்றின் அத்தியாவசிய தேவையான சுத்தமான தண்ணிர் கிடைக்காததுதான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நாம் சின்னவயதில் சாதரனமாக நினைத்து அடித்து துன்புறுத்திய ஒரு தட்டானுக்கு இப்படி ஒரு திறமை..

No comments:

Post a Comment