Thursday, July 17, 2014

'பஞ்ச பத்ர பாத்திரம்' (பஞ்ச பாத்திரம்)



இல்லங்களில் பூஜையின்பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். அதன் இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பதாகும். அதாவது , ஐவகை பத்திரங்களை(இலைகள்) நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.
.
~ துளசி, ~ அருகு, ~ வேம்பு, ~ வில்வம், ~ வன்னி
ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள். இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'. இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது. இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. சிறந்த மருத்துவ சக்திகளை கொண்ட இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

~ சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம்,
~ திருமாலுக்கு உகந்தது துளசி,
~ அம்மனுக்கு வேப்பிலை,
~ விநாயகருக்கு அருகம் புல்,
~ பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.

No comments:

Post a Comment