Sunday, July 27, 2014

வடசொல் : தமிழ்ச் சொல்

ஐயா பசியாறிட்டீங்களா (சார் டிபன் ஆயிடிச்சா ? )
-----------------------------------------------------------------------------------
வடசொல் : தமிழ்ச் சொல்
--------------------------
சாதம் - சோறு
கிரமம் - ஒழுங்கு
கிராமம் - சிற்றூர்
சக்தி - ஆற்றல்
சகோதரன் - உடன்பிறந்தான்
சந்நிதி - திருமுன்(பு)
சபதம் - சூளுரை
சந்தோஷம் - மகிழ்ச்சி
ஜலதோஷம் - நீர்க்கோவை
சாபம் - கெடுமொழி
சிநேகம் - நட்பு
சுத்தம் - தூய்மை
சுபாவம் - இயல்பு
சேவை - தொண்டு
தாகம் - வேட்கை
நிபுணர் - வல்லுநர்
பகிரங்கம் - வெளிப்படை
பரிகாசம் - நகையாடல்
பந்தபாசம் - பிறவித்தளை
பிரசாரம் - பரப்புரை
மந்திரம் - மறைமொழி
மிருகம் - விலங்கு
முகூர்த்தம் - நல்வேளை
யுத்தம் - போர்
இரகசியம் - மறைபொருள்
வயது - அகவை
வாகனம் - ஊர்தி
வாதம் - சொற்போர்
விகிதம் - விழுக்காடு
விக்கிரகம் - திருமேனி அல்லது செப்புச் சிலை
வேதம் - மறை
வேகம் - விரைவு
ஜாதகம் - பிறப்புக் கணக்கு
ஜெபம் - தொழுகை
ஜென்மம் - பிறவி
ஜோதிடன் - கணியன்
ஸ்தாபனம் - நிறுவனம்
ஷேத்ரம் - திருத்தலம்
யாகம் - வேள்வி
போகம் - நுகர்வு
மோகம் - விருப்பு

No comments:

Post a Comment